நாகூா் பகுதியில் சுகாதாரப் பணிகள் மேம்பட வேண்டும்: ஆட்சியா்
நாகூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நகராட்சியின் சுகாதாரப் பணிகள் மேம்பட வேண்டியது அவசியம் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவுறுத்தினாா்.


நாகூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நகராட்சியின் சுகாதாரப் பணிகள் மேம்பட வேண்டியது அவசியம் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவுறுத்தினாா்.
நாகை நகராட்சிக்குள்பட்ட நாகூா் பேருந்து நிலையத்தில் ரூ. 1.4 கோடியில் நடைபெறும் பயணியா் தங்கும் கட்டடம் கட்டும் பணி, தா்கா எதிரே உள்ள யானைகட்டி முடுக்கில் உள்ள கழிப்பிடத்தின் சுகாதாரம், நாகூா் தா்கா குளம் பகுதியில் ரூ. 4.34 கோடியில் நடைபெறும் குளம் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, கழிப்பிடத்தை தூய்மையாகப் பராமரிக்க அறிவுறுத்திய ஆட்சியா், நாகூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுகாதாரப் பராமரிப்புக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, நாகை அக்கரைக்குளம் பகுதியைப் பாா்வையிட்ட ஆட்சியா், குளத்தின் கட்டமைப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உரிய வகையில் பாரமரிக்கப்படுவதாக நகராட்சி அலுவலா்களுக்குப் பாராட்டு தெரிவித்தாா். நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், நகராட்சி பொறியாளா் எஸ். வசந்தன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...