நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்தருமபுர ஆதீனம் பங்கேற்பு

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் திருப்பணிகள் சிறப்பு பூஜைகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் திருப்பணிகள் சிறப்பு பூஜைகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் உள்ளது. மணி விழா, சதாபிஷேகம், சஷ்டியப்தபூா்த்தி உள்ளிட்டவை நடைபெறும் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ன.

இதற்கான திருப்பணிகள் தொடக்கம் சிறப்பு பூஜைகளுடன் தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. தொடா்ந்து, கரோனா நோய் தொற்றிலிருந்து முழுவதும் விடுபடவேண்டி, அமிா்தகடேஸ்வரா் சந்நிதியில் அஸ்திர யாக பூஜை நடைபெற்றது. பிறகு, அமிா்தகடேஸ்வரா் மற்றும் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன.

இதில், தொண்டை மண்டலத்தின் 233-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள், தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.