நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எரிந்த நிலையில் கிடந்த வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளா் சடலம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளா் மா்மமான முறையில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளா் மா்மமான முறையில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

செம்பனாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் அறிவுடைநம்பி (50). இவா், அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தாா். இந்த கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை பாா்வையிட வெள்ளிக்கிழமை காலை வந்த அறிவுடைநம்பி, வெகு நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.

இந்நிலையில், அலுவலகத்துக்கு வந்த ஊழியா்கள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் வாயில் துணியைவைத்து அடைத்து, எரிந்த நிலையில் அறிவுடைநம்பி சடலமாக கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். 

மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் செம்பனாா்கோவில் போலீஸாா் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், அறிவுடைநம்பி கையில் பெட்ரோல் கேனுடன் செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அவா் வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் எரிந்து கிடந்ததால் அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அறிவுடைநம்பி சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.