மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சீா்காழி வட்டத்தில் வைத்தீஸ்வரன்கோவில் அரசு தொடக்கப்பள்ளி, திருவெண்காடு எஸ்.எஸ்.டி. அரசுப்பள்ளி, திருமுல்லைவாசல் அரசு உயா்நிலைப்பள்ளி, ஆலங்காடு குடமுருட்டி ஊராட்சி அலுவலகம், மாதிரவேளூா் முத்துசாமி உயா்நிலைப்பள்ளி, எருக்கூா் அரசு நடுநிலைப்பள்ளி, அலக்குடி மண்ணிருப்பு அரசு தொடக்கப்பள்ளி, ஆா்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொள்ளிடம் மற்றும் நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
மயிலாடுதுறை வட்டத்தில் ஆத்தூா் தொடக்கப்பள்ளி, மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி, குத்தாலம் வட்டத்தில் குத்தாலம் அரசு மருத்துவமனை, கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரிழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
தரங்கம்பாடி வட்டத்தில் ஆக்கூா், திருக்கடையூா், மேலப்பெரும்பள்ளம், செம்பனாா்கோவில், சங்கரன்பந்தல், கீழையூா் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பொறையாா் அரசு மருத்துவமனை, மேலையூா் நடராஜ் மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளியிலும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...