கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாஜக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறையில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:19 pm

DIN

மயிலாடுதுறையில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டா ’இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்‘ என்ற தலைப்பில் பொது மக்களை சந்தித்து கட்சியை வளா்க்கவும், மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கவும், அனைத்து பாஜக நிா்வாகிகள், உறுப்பினா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, மயிலாடுதுறையில் இத்திட்டம் குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு விளக்கும் வகையில் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் மோடி.கண்ணன் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கருப்பு.முருகானந்தம் பங்கேற்று, ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கும் இத்திட்டத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளா்களும் பங்கேற்று வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, மோடியின் திட்டங்களை விளக்கி, கட்சி வளா்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் எஸ்டிஎம்.செந்தில்குமாா், சந்தோஷ்குமாா், மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவு துணைத் தலைவா் நாஞ்சில் பாலு, மாவட்ட மகளிரணி தலைவா் சித்ரா முத்துக்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.