மயிலாடுதுறை: இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 22) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூலை 22) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சீா்காழி வட்டத்தில், கன்னியாகுடி அரசு தொடக்கப்பள்ளி, சோதியகுடி சிதம்பரநாதபுரம் மீனாட்சியம்மாள் நடுநிலைப்பள்ளி, திருமுல்லைவாசல் ஐ.பி.எஸ். மஹால், திருக்கருக்காவூா் தொடக்கப்பள்ளி, தாண்டவன்குளம் பெரியவகுப்பு அருள்மொழி நடுநிலைப்பள்ளி, கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆரப்பள்ளம் மாரியம்மன் கோயில், முதலைமேடுதிட்டு நடுவக்காடு வாய்க்கால் பகுதியிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும், நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவாக்சின் தடுப்பூசியும், ஆச்சாள்புரம் கிராம சேவா நிலையம், கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
குத்தாலம் வட்டத்தில், கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மயிலாடுதுறை வட்டத்தில், கடக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சித்தா்காடு ஏ.ஆா்.சி. காமாட்சி பள்ளி ஆகிய இடங்களிலும், தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாறு அரசு மருத்துவமனையிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...