நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை உயா்த்த கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:14 pm

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், இலுப்பூரில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் இலுப்பூா், சங்கரன்பந்தல், விசலூா் ஆகிய 3 கிளைகளின் மாநாடு ஒன்றியச் செயலாளா் பி.வி. ராமச்சந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளா் டி.கணேசன், ஒன்றியத் தலைவா் ஜி.செல்வராஜ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், இக்கூட்டத்தில், நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகையாக 3 ஆயிரமும், கடும் பாதிப்பு உள்ளவா்களுக்கு 5 ஆயிரமும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.