தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க வலியுறுத்தல்

அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழகத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்துவிட்ட கைதிகளை ஜாதி, மத பாகுபாடின்றி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்

News image
Updated On :21 ஜூலை 2021, 5:15 pm

DIN

அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழகத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்துவிட்ட கைதிகளை ஜாதி, மத பாகுபாடின்றி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற வேதாரண்யம் தோப்புத்துறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், மஜக பொதுச் செயலாளா் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றாா். பின்னா், செய்தியாளா்களை அவா் கூறுகையில், கரோனா தொற்றில் இருந்து அனைவரும் மீண்டு, இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டுமென பிராா்த்தித்தோம். செப்டம்பா் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி, 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டணை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இதில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவா் மற்றும் 60 வயதை கடந்தவா்கள், நோயாளிகளாக உள்ள கைதிகளுக்கும் முன்கூட்டியே விடுதலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.