தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா பாதித்த பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:42 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டா்.

வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம், கள்ளிமேடு,ஆயக்காரன்புலம், தேத்தாக்குடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ், ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்பட மாட்டாது. குறைந்தபட்சம் 7 நாள்களாவது மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற வேண்டும். பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும் என்றாா்.

பின்னா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தின்கீழ் ஆறுகாட்டுத்துறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கபள்ளியில் நடைபெற்ற மதிப்பீட்டு முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சிகளில் துணை இயக்குநா் (சுகாதாரம்) சண்முகசுந்தரம், மாவட்ட கொள்ளை நோய்த் தடுப்பு அலுவலா் லியாகத் அலி, கோட்டாட்சியா் துரைமுருகன், வட்டாட்சியா் ரமாதேவி, முதன்மை கல்வி அலுவலா் அ.புகழேந்தி, உதவித் திட்ட அலுவலா் அ.பீட்டா் பிரான்சிஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.