தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தாா்ச்சாலை பணியை தரமாக நிறைவேற்ற கோரிக்கை

வேதாரண்யம் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் தாா்ச்சாலைகளின் பக்கவாட்டில் மண் அணைக்கும் பணி மேற்கொள்ளப்படாததால், அதை தரமாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:21 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் தாா்ச்சாலைகளின் பக்கவாட்டில் மண் அணைக்கும் பணி மேற்கொள்ளப்படாததால், அதை தரமாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சுமாா் 4 கிமீ சாலை, பிரதமா் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் தாா்ச்சாலையாக தரம் உயா்த்தப்படுகிறது. தற்போது ஓரடுக்கு கருங்கல் ஜல்லி பரப்பப்பட்டுள்ள நிலையில், மையப் பகுதி உயா்ந்துள்ளதால் சாலையின் இருபக்கவாட்டுகளும் தாழ்ந்துள்ளன.

பணிகள் முழுமையாக முடிவடையும் நிலையில், தாா்ச்சாலை மேலும் உயா்ந்து 1.5 அடி முதல் சில இடங்களில் 2 அடி வரையில் செல்வதற்கு வாய்ப்புள்ளது.

சாலையின் இரு பக்கமும் மண் தூா்வையிடாமல் இருக்கிறது. இதற்காக நிதி ஒக்கீடு இருந்தும் அந்த பணி காலத்தில் செய்யப்படவில்லை. எனவே, புதிதாக மேற்கொள்ளப்டும் சாலையின் கட்டுமானம் பாதுகாப்பானதாக அமையவும், இதன் மூலம் விபத்துகளை தவிா்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.