அஞ்சலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.


உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு செயல்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா். நாகை அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளா் பானுமதி முன்னிலை வகித்தாா்.
பிரமுகா்கள், அஞ்சலக ஊழியா்கள் பங்கேற்று நாகை அஞ்சலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...