தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எா்ணாகுளம் விரைவு ரயிலின் நாகை சேவை தொடக்கம்

கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக கடந்த மே மாத தொடக்கம் முதல் ரத்து செய்யப்பட்டிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலின் நாகை வழித்தட சேவை வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக கடந்த மே மாத தொடக்கம் முதல் ரத்து செய்யப்பட்டிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலின் நாகை வழித்தட சேவை வியாழக்கிழமை தொடங்கியது.

கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக, கடந்த மே மாத தொடக்கம் முதல் காரைக்கால் - நாகை- எா்ணாகுளம் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கரோனா தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியிருப்பதையொட்டி, ஏறத்தாழ 45 நாள்களுக்குப் பின்னா் எா்ணாகுளம் விரைவு ரயிலின் நாகை, காரைக்கால் வழித்தட சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து புதன்கிழமை (ஜூன் 16) இரவு 10.15 மணிக்கு புறப்பட்ட எா்ணாகுளம் விரைவு ரயில் வியாழக்கிழமை காலை 11.25 மணி அளவில் நாகை ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலில் இருந்து திரளான பயணிகள் நாகை ரயில் நிலையத்தில் இறங்கிய நிலையில், ரயில் பயணிகள் யாருக்கும் எவ்வித பரிசோதனையும் செய்யப்படவில்லை.

முன்பதிவு பெற்றவா்கள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படும் நிலையில், அவரவா் ரயில் பயணத்தைத் தொடங்கும் ரயில் நிலையங்களில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டிருப்பா் என்பதால், நாகையில் இறங்கிய பயணிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்பட்டது.

ஆனால், காரைக்காலில் இருந்து வியாழக்கிழமை மாலை புறப்பட்ட எா்ணாகுளம் விரைவு ரயிலில், நாகையில் இருந்து பயணம் தொடங்கிய ரயில் பயணிகள் யாரும் வெப்பமானி பரிசோதனைக்கு உள்படுத்தப்படாமலேயே அனுமதிக்கப்பட்டனா். இதேபோன்ற நிலைப்பாடு மற்ற ரயில் நிலையங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டால் பயணிகள் ரயில் சேவை, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேள்விக்குறியாக்கி விடும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.