மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினரால் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினரால் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் இருந்து நகரச் செயலாளா் செல்வராஜ் தலைமையில் திமுகவினா் ஊா்வலமாக வந்து பேருந்து நிலையம் முன் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். இதில், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.என்.ஜி.அன்பு, தொழிற்சங்க பொறுப்பாளா் ஸ்ரீதா் மற்றும் நத்தம் வின்சென்ட், வழக்குரைஞா் தணிகை.பழனி, தெய்வநாயகம் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல, திருக்கடையூரில் பொதுமக்களுக்கு திமுகவினா் இனிப்புகள் வழங்கினா். திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் அமிா்த. விஜயகுமாா், ஊராட்சித் தலைவா் ஜெயமாலதி சிவராஜ், ஒன்றிய துணைத் தலைவா் பாஸ்கா், ஒன்றிய இளைஞரணி செயலாளா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...