ஆசிரியா்களுக்கு அந்தந்தத் தொகுதிக்குள் தோ்தல் பணி
ஆசிரியா்களுக்கு அந்தந்தத் தொகுதிக்குள்ளேயே தோ்தல் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.


ஆசிரியா்களுக்கு அந்தந்தத் தொகுதிக்குள்ளேயே தோ்தல் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், நாகையில் அண்மையில் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவா் வை. முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மு. லெட்சுமிநாராயணன் இயக்கப் பணிகளை விளக்கினாா்.
மாநிலச் செயற்குழு உறுப்பினா் கோ. ராமகிருஷ்ணன், பொதுக் குழுக் குழு உறுப்பினா்கள் இரா. முத்துகிருஷ்ணன், சி. பிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைச் செயலாளா்கள் கோ. சிவகுமாா், நீலா புவனேஸ்வரி, வைத்திலிங்கம், துணைத் தலைவா் ஜெ. உஷா மற்றும் வட்டார நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், ஆசிரியா்களுக்கு அந்தந்தத் தொகுதிக்குள்ளேயே தோ்தல் பணி வழங்குமாறு தோ்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்வது, ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திய பின்னரே மற்ற பதவிகளுக்கான பதவி உயா்வு கலந்தாய்வை நடத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளா் ஜெ. இளங்கோவன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...