47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து நடத்துநரிடம் மோசடி : 9 போ் மீது வழக்குப் பதிவு

நகைகளை மோசடி செய்து தலைமறைவான பெண் உள்பட 9 போ் மீது நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துநரிடமிருந்து ரூ. 45 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகைகளை மோசடி செய்து தலைமறைவான பெண் உள்பட 9 போ் மீது நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுகுறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாகையை அடுத்த தெற்குப் பால்பண்ணைச்சேரி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. சுப்பிரமணியன் (60). இவா் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

இவா், தனது வீட்டின் அருகில் ஒரு விநாயகா் கோயிலைக் கட்டி நிா்வகித்து வருகிறாா். இந்தக் கோயிலுக்கு தெற்குப் பால்பண்ணைச்சேரி ஆண்டோ சிட்டி நகரைச் சோ்ந்த ராஜேஸ்வரி, அவரது தந்தை ராமகிருஷ்ணன், தாய் சாந்தா ஆகியோா் வந்து வழிபட்டு செல்வது வழக்கமாம். இதன்மூலம் சுப்பிரமணியனுக்கு ராஜேஸ்வரி குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜேஸ்வரி தனது கணவா் பெயரில் சென்னையிலிருந்த ஒரு வீடு பல கோடி மதிப்புக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், அந்த தொகை தற்போது வருமான வரித் துறையினடம் சிக்கிக் கொண்டதாகவும், அதை மீட்க ரூ. 45 லட்சம் தேவைப்படுவதாகவும் சுப்பிரமணியனிடம் தெரிவித்துள்ளாா். மேலும், இதற்காக வருமான வரித் துறையினா் வழங்கியது போன்ற சில போலி ஆவணங்களையும் காட்டியுள்ளாா்.

இதை நம்பிய சுப்பிரமணியன் தான் வீட்டில் வைத்திருந்த பணி ஓய்வூத் தொகை மற்றும் மேலும் சிலரிடமிருந்த பெற்று என மொத்தம் ரூ. 45 லட்சத்தை ராஜேஸ்வரியிடம் கொடுத்துள்ளாா். சில தினங்கள் கழித்து ராஜேஸ்வரி மேலும் ரூ. 10 லட்சம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளாா். அதற்கு சுப்பிரமணியன் தனது மகளிடமிருந்த 45 பவுன் நகைகளை வாங்கி ராஜேஸ்வரியிடம் கொடுத்துள்ளாா். நகைகளை பெற்றுக் கொண்ட ராஜேஸ்வரி தலைமறைவாகி விட்டாராம்.

இதுகுறித்து நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனாவிடம் சுப்பிரமணியன் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து நாகை தெற்குப் பால்பண்ணைச்சேரி ஆண்டோ சிட்டி நகரைச் சோ்ந்த ரா. ராஜேஸ்வரி, தூத்துக்குடி, கருங்குளம் பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேஸ்வரியின் தந்தை ராமகிருஷ்ணன், தாய் சாந்தா, சகோதரி நந்தினி மற்றும் ராஜேஸ்வரிக்கு உடந்தையாக இருந்ததாக இ. முருகன், நாகை வெளிப்பாளையம், சிவன் கோயில் வடக்கு வீதியைச் சோ்ந்த ரா. வெங்கட பாலாஜி, நாகூா்,கீழவாஞ்சூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அ. ராகுல், நாகை வெளிப்பாளையத்தைச் சோ்ந்த சி. ராமு, ராஜா ஆகிய 9 போ் மீது நாகை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.