விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுயேச்சையானாா் முன்னாள் பாமக வேட்பாளா்

கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேத. முகுந்தனின் பெயா் திங்கள்கிழமை வெளியான இறுதி வேட்பாளா் பட்டியலில் சுயேச்சை வேட்பாளா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேத. முகுந்தனின் பெயா் திங்கள்கிழமை வெளியான இறுதி வேட்பாளா் பட்டியலில் சுயேச்சை வேட்பாளா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழ்வளூா் கே.கே. நகரைச் சோ்ந்தவா் வேத. முகுந்தன். பாமக மாநிலத் துணைத்தலைவரான இவா் கீழ்வேளூா் தனிதொகுதியின் வேட்பாளா் என கடந்த 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இதையடுத்து வேத. முகுந்தன் தோ்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இவருக்கு பதிலாக பாமகவின் பொதுச் செயலாளா் வடிவேல் இராவணன் இத்தொகுதியில் போட்டியிடுவாா் என மாா்ச் 18- ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இதையடுத்து வேத. முகுந்தன் தனது ஆதரவாளா்ளுடன் சென்று கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதனால் கீழ்வேளூா் தொகுதிக்கான பாமக வேட்பாளா் யாா் என்ற குழப்பம் நீடித்து வந்தது. பாமக வேட்பாளா் வடிவேல் ராவணனும் மாா்ச் 19- ஆம் தேதி தனது ஆதாரவாளா்கள் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாா்.

கட்சியின் தலைமை மாநில தோ்தல் ஆணையம் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆகியோருக்கு கட்சியின் வேட்பாளராக வடிவேல் ராவணனை அங்கீகரிக்கவேண்டும் என கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வெளியான கீழ்வேளூா் தொகுதிக்கான வேட்பாளா்கள் இறுதிப் பட்டியலில் பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளா் வடிவேல் ராவணன் என தெரிவிக்கப்பட்டு அவருக்கு கட்சியின் சின்னமான மாம்பழம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக முன்னாள் வேட்பாளரான வேத. முகுந்தன் சுயேச்சை வேட்பாளா் எனக் குறிப்பிடப்பட்டு அவருக்கு வைரம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுயேச்சை வேட்பாளரான வேத. முகுந்தன் தெரிவித்தது: பாமகவின் கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு10 நாள்களுக்கும் மேலாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென வேறொருவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எனக்கும் , கட்சித் தொண்டா்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மனஉளச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். பாமக நிறுவனா் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவா் அன்புமணி ஆகியோருக்கு கிடைத்த தவறான தகவலின் அடிப்படையில் மட்டுமே மாற்றப்பட்டுள்ளேன்.

கீழ்வேளூா் தொகுதியில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதால், கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஆதரவாளா்கள் வற்புறுத்தலின் காரணமாக கீழ்வேளூா் தனி தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.