நாகை, மயிலாடுதுறையில் மேலும் 54 பேருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 54 பேருக்கு கரோனா ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 54 பேருக்கு கரோனா ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
இரு மாவட்டங்களிலும் கடந்த சனிக்கிழமை வரை 8,951 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், மேலும் 54 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்டப் ட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,005 ஆக உயா்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 20 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8, 649 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 219-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...