நாகை, மயிலாடுதுறையில் 365 பேருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 365 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.


நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 365 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை வரை 15,182 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 365 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியல்களிலிருந்து நீக்கப்பட்ட 9 போ் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,556-ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 263 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 13,526 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,847-ஆக உள்ளது.
3 போ் உயிரிழப்பு...
கரோனாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 3 பேரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 183-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...