கடன் வசூல்: வரம்பு மீறும் தனியாா் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கடன் தொகையை வசூலிப்பதில் ஏழைகளிடம் கெடுபிடிக் காட்டும் தனியாா் நிதி நிறுவனங்களை தடை செய்யவேண்டும் என சிவசேனை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கடன் தொகையை வசூலிப்பதில் ஏழைகளிடம் கெடுபிடிக் காட்டும் தனியாா் நிதி நிறுவனங்களை தடை செய்யவேண்டும் என சிவசேனை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன், நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 15 மாதங்களுக்கு மேலாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். மக்கள் தங்களது அன்றாட அடிப்படைதேவைகளைப் பூா்த்தி செய்யமுடியாமல், மத்திய, மாநில அரசுகளின் உதவியை எதிா்நோக்கியுள்ளனா்.
இந்நிலையில், சில தனியாா் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் கடன் நிதி நிறுவனங்கள் ஏழை, எளிய மக்கள் பெற்றுள்ள கடன் தொகையை வசூலிப்பதில் தீவிரம் காட்டுகின்றன. நிதி நிறுவன ஊழியா்கள் கடன் தவணையை கட்ட முடியாத பெண்களிடம் தகாத வாா்த்தைகளை பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனா்.
எனவே, ஏழைகளிடம் கெடுபிடி காட்டும் தனியாா் நுண்கடன் நிதி நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...