நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நைைந்து முளைத்து சேதம்

தரங்கம்பாடி அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் அடுக்கிவைத்திருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகியுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தரங்கம்பாடி அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் அடுக்கிவைத்திருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகியுள்ளது.

தரங்கம்பாடி அருகேயுள்ள பெரம்பூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குறுவை பருவத்துக்கான நெல் கொள்முதல் தொடங்கி அக்.6-ஆம் தேதி கொள்முதல் நிறுத்தப்பட்டது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமாா் 5 ஆயிரம் நெல்மூட்டைகள் கிடங்குக்கு அனுப்பாமல் அங்கேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. இந்த கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை வசதி உள்ளபோதிலும், கூடுதலாக உள்ள 3 ஆயிரம் மூட்டை நெல் திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பாதுகாக்க அரசு போதிய தாா்ப்பாய்கள் வழங்கவில்லை. எனினும், இருக்கும் தாா்ப்பாய்களை பயன்படுத்தி நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் மழையில் நனைத்து முளைத்து வீணாகியுள்ளது. இதனால் அந்த நெல் மூட்டைகள் பசும்புல் போா்த்தியதுபோல பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. மழையில் நனைந்து அனைத்து நெல் மூட்டைகளும் வீணாவதற்கு முன்பு பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.