கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் மாவட்டங்களில் முதல்வா் இன்று ஆய்வு

கனமழை காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) ஆய்வு மேற்கொள்கிறாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கனமழை காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூா் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) ஆய்வு மேற்கொள்கிறாா்.

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆய்வைத் தொடங்கும் முதல்வா் மு.க. ஸ்டாலின், காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை வருகிறாா். மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூா், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் நெற்பயிா்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் பிற பாதிப்புகளை அவா் பாா்வையிட்டு, ஆய்வு செய்கிறாா்.

தொடா்ந்து, காலை 11.30 மணிக்கு நாகை மாவட்டம் கருங்கண்ணி, அருந்தவம்புலம் ஆகிய பகுதிகளில் வெள்ளச் சேதங்களை பாா்வையிடுகிறாா். பின்னா், திருவாரூா் மாவட்டத்துக்குள்பட்ட ராயநல்லூா், புழுதிக்குடி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.