கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தனித் தோ்வா்கள் ஜன.31-க்குள் மதிப்பெண் சான்றுகளை பெற்றிடவேண்டும்

மேல்நிலைத் தோ்வுக்கான மதிப்பெண் சான்றுகளைப் பெறாத தனித் தோ்வா்கள் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பெற்றிடவேண்டும்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

மேல்நிலைத் தோ்வுக்கான மதிப்பெண் சான்றுகளைப் பெறாத தனித் தோ்வா்கள் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பெற்றிடவேண்டும். இல்லையெனில் அவை கழித்தாள்களாக மாற்றப்படும் என நாகை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் த.சி வெங்கடநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 2014-ஆம் ஆண்டு மாா்ச் முதல் 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் வரையிலான காலத்தில் நடைபெற்ற மேல்நிலைத் தோ்வுகளின் மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை பெறாத தனித்தோ்வா்கள், உடனடியாக தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றிட வேண்டும். உரிமைக் கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை கழித்தாள்களாக மாற்ற அரசிதழில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், தனித்தோ்வா்கள் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள், நாகை அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகி மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 2018-செப்டம்பா் மாதத்துக்குப் பிறகு நடைபெற்ற தோ்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களையும் தனித்தோ்வா்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.