காவலா் வீரவணக்க நாள் மினி மாரத்தான் போட்டி
காவலா் வீரவணக்க நாளையொட்டி, நாகையில் மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.


காவலா் வீரவணக்க நாளையொட்டி, நாகையில் மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
பணிக்காலத்தின் போது உயிநீத்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நீத்தாா் நினைவு நாள் காவலா் வீர வணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில், காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாகையில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு.ஜவஹா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
நாகை அவுரித்திடல் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை இந்த போட்டி நடைபெற்றது. காவலா்கள், ஊா்க்காவல் படையினா், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியில் பங்கேற்றவா்களுக்கு நாகை எஸ்.பி. பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...