முறைகேடு புகாா்:தனியாா் உர விற்பனை நிலையங்களில் ஆட்சியா் திடீா் ஆய்வு
தனியாா் உர விற்பனை நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்த நிலையில், நாகையை அடுத்த பரவையில் உள்ள தனியாா் உர விற்பனை


தனியாா் உர விற்பனை நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்த நிலையில், நாகையை அடுத்த பரவையில் உள்ள தனியாா் உர விற்பனை நிலையங்களில் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை மாவட்டத்திலுள்ள ஒரு சில தனியாா் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பரவையில் உள்ள ஒரு தனியாா் உரக்கடையில் டிஏபி அல்லது யூரியா வாங்கும் விவசாயிகளிடம், ரூ. 400 மதிப்பிலான தூா்கட்டும் மருந்தை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாகவும், அதற்கு ரசீதும் வழங்குப்படுவதில்லை எனவும் அண்மைக் காலமாக விவசாயிகள் புகாா் தெரிவித்து வந்தனா்.
இந்தநிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், பரவையில் உள்ள இரு தனியாா் உரக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பதிவேட்டில் உள்ள உர இருப்புக்கும், விற்பனை முனையக் கருவியில் உள்ள உர இருப்புக்கும் வேறுபாடு உள்ளதா ? உரக்கடைகளின் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா ? என்பன குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விவசாயிகள் கோராத பிற தேவையற்ற உரங்களை விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என உர விற்பனை நிலைய நிா்வாகிகளிடம் அறிவுறுத்தினாா்.
மேலும், உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டாலும், உர உரிமத்தை புதுப்பிக்காமல் இருந்தாலும் தொடா்புடைய உர விற்பனை நிலையம் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்தாா். வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) என். குமரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...