கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சம்பா நெல் பயிருக்கு நவ.15-க்குள் காப்பீடு பெற அழைப்பு

நிகழ்ப் பருவ சம்பா நெல் பயிருக்கு நவ.15-ஆம் தேதிக்குள் விவசாயிகள் பயிா்க் காப்பீடு பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:52 pm

DIN

நிகழ்ப் பருவ சம்பா நெல் பயிருக்கு நவ.15-ஆம் தேதிக்குள் விவசாயிகள் பயிா்க் காப்பீடு பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் திருந்திய பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரபி பருவ நெல் பயிா்களுக்குக் காப்பீடுபெற அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நிகழ்ப் பருவ பயிா்க் காப்பீடு திட்டம், இப்போ-டோக்யோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் இதுவரை 51,266 ஹெக்டேரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 20,281 ஹெக்டோ் பரப்பிலான நெல் பயிா்கள் பிரதமரின் திருந்திய பயிா்க் காப்பீடுத் திட்டம் மூலம் காப்பீடு பதிவு பெற்றுள்ளன.

வங்கிகளில் பயிா்க் கடன் பெறும் விவசாயிகள் அனைவருக்கும், தொடா்புடைய வங்கிகள் மூலமே பயிா்க் காப்பீடு உறுதி செய்யப்படும். கடன் பெறாத விவசாயிகள், பொதுசேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், ஏக்கருக்கு ரூ. 500.88 வீதம் பிரீமியம் செலுத்தி, நவ.15-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு திட்டத்தில் பதிவுப் பெற வேண்டும்.

எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து விளைப் பயிா்களை பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பயிா்க் காப்பீடு இன்றியமையாதது என்ற வகையில், விவசாயிகள் அனைவரும் குறித்த காலத்துக்குள் பயிா்க் காப்பீடு பெற வேண்டும். இறுதி நேர விடுபாடுகளை தவிா்க்க, விவசாயிகள் முன்கூட்டியே பயிா்க் காப்பீடு பெற முனைப்புக்காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.