நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருக்குவளை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செரிவூட்டி

திருக்குவளை அரசு மருத்துவமனைக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சாா்பில், ஆக்சிஜன் செரிவூட்டி மற்றும் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அரசு மருத்துவமனைக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சாா்பில், ஆக்சிஜன் செரிவூட்டி மற்றும் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு மாநிலக் கிளை மற்றும் நாகை மாவட்ட கிளையிடம் இருந்து பெறப்பட்ட நிதி மூலம் ரூ. 75 ஆயிரம் மதிப்பில் ஆக்சிஜன் செரிவூட்டி மற்றும் முகக் கவசங்களை திருக்குவளை சமூகப் பாதுகாப்பு திட்ட

வட்டாட்சியா் கே. காா்த்திகேயன் மருத்துவ அலுவலா் திவாகரிடம் வழங்கினாா். உடன் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கீழ்வேளூா் கிளை கௌரவச்செயலாளா் தங்க.மோகன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கீழ்வேளூா் கிளை ஆயுள் உறுப்பினா் ச. சந்திரசேகரன் ரெட்கிராஸ் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.