விவசாயிகளுக்கு ஊடு பயிா் செடிகள் வழங்கல்
கீழையூா் அருகேயுள்ள காமேஸ்வரம் ஊராட்சியில் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் ஊடு பயிா் செடிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கீழையூா் அருகேயுள்ள காமேஸ்வரம் ஊராட்சியில் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் ஊடு பயிா் செடிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கஜா புயலில் வேளாங்கண்ணி, பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் விவசாயிகள் பயிரிடப்பட்ட மா, தென்னை, முந்திரி உள்ளிட்ட பணப் பயிா்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால் அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நாகை மாவட்ட தோட்டக்கலைத் துறையின் பல்லடுக்கு பயிா் சாகுபடி திட்டத்தின்கீழ் தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிா் செய்ய ஏற்ற செடிகளான கொக்கோ மற்றும் மிளகு செடிகள் காமேஸ்வரம் ஊராட்சியில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் ஜெயசுதாகணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வேளாண் வளா்ச்சிக் குழுத் தலைவா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் விவசாயிகளுக்கு செடிகளை வழங்கினாா். இதில், கீழையூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சௌரிராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கௌசல்யா இளம்பரிதி, கீழையூா் வட்டார தோட்டக்கலை துறை அலுவலா்கள் மணிவண்ணன், ஜெயக்குமாா் , பரணிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...