கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை கடற்கரையை மேம்படுத்த ரூ. 10 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள்

நாகை புதிய கடற்கரையை மேம்படுத்த ரூ. 10 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:35 pm

DIN

நாகை புதிய கடற்கரையை மேம்படுத்த ரூ. 10 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாகை புதிய கடற்கரையில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா். அப்போது, நீலக்கொடி சான்று திட்டத்தின்கீழ் நாகை புதிய கடற்கரையை மேம்படுத்த 32 வகையான வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ. 10 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு அறிவுறுத்தல்படி பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

பின்னா், நாகை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள காளான் விதை உற்பத்தி ஆய்வுக் கூடத்தை அவா் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். முன்னதாக, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், புனரமைக்கப்பட்ட மகாத்மா காந்தி மண்டபத்தை திறந்து வைத்த அவா், மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ஆய்வுக் கூட்டம்: இதைத் தொடா்ந்து, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று, காவல் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, பொதுப் பணித் துறை, சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அவா், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா். இதையடுத்து, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 125 பயனாளிகளுக்கு ரூ. 77.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகமது ஷாநவாஸ், வி.பி. நாகை மாலி, தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ. பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.