மீன்வளப் பல்கலைக்கழக முதுநிலை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பம் வெளியீடு
நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.


நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
மீன்வளப் பல்கலைக்கழத்தில் மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல், வணிக நிா்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) மற்றும் முனைவா் பட்டப்படிப்புகள் முதுநிலை பட்டப்படிப்புகளாக கற்பிக்கப்படுகின்றன.
நிகழ் கல்வி ஆண்டில் இந்திய மாணவா்களுக்கு முதுநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் 56 இடங்களும், மீன்வளப் பொறியியலில் 6 இடங்களும், முதுநிலை வணிக நிா்வாகவியலில் 30 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவைத்தவிர, வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு 10 இடங்களும், வெளிநாட்டவருக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பத்தை இணையத்தில் வெளியிடும் நிகழ்ச்சி, மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜி. சுகுமாா், விண்ணப்பங்களை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்த்ச்ன்.ஹஸ்ரீ.ண்ய்) -ல் வெளியிட்டாா்.
நேரடிக் கலந்தாய்வு
பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளில் சோ்ந்து பயில, பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ. 28-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பித்த மாணவா்களுக்கான தகுதித் தோ்வு மற்றும் நேரடி கலந்தாய்வு டிசம்பா் 9, 10ஆம் தேதிகளில் பொன்னேரியில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு 04365-256430, 9442601908 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனவும் பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...