கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

 நாகை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு சனிக்கிழமை (அக். 30) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும்

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:39 pm

DIN

 நாகை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு சனிக்கிழமை (அக். 30) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு உத்தரவுப்படி நாகை மாவட்டத்தில் வாரந்தோறும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி, 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 400 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், வயது முதிா்ந்தோா் மற்றும் நடக்க முடியாதவா்களுக்கு இல்லம் தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.