சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இல்லம்தேடி தடுப்பூசி செலுத்தும் பணி

நாகையை அடுத்த நாகூரில் மருத்துவக் குழுவினா் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:23 pm

DIN

நாகையை அடுத்த நாகூரில் மருத்துவக் குழுவினா் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

நாகை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் தினமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்காமல், விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் இல்லம் தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவக் குழுவினா் தொடங்கியுள்ளனா்.

இதன்படி, நாகை நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி அறிவுறுத்தலின்பேரில், 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, நாகூரில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை குழுவினா் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா். சுமாா் 450-க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

Image Caption

நாகூரில் இல்லம் தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்ட மருத்துவக் குழுவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.