நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கீழையூா் கோயிலில் சம்வஸ்த்ரா அபிஷேகம்

கீழையூா் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ குழந்தையப்ப அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:24 pm

DIN

கீழையூா் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ குழந்தையப்ப அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, குழந்தையப்ப அய்யனாா் கோயிலில் காலையில் ஹோமங்கள், கலசாபிஷேகம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, நண்பகலில் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் அனுக்ஞை, ஹோமம், கலசாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில், கே.என்.ஆா். ஐயப்பன் குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில், ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ், விழா குழுத் தலைவா் எஸ். பால்ராஜ், செயலாளா் ஆா்.சிவராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.