நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுகாதார விழிப்புணா்வு

திருக்குவளை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு கை கழுவுதல் குறித்து சுகாதார விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:26 pm

DIN

திருக்குவளை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு கை கழுவுதல் குறித்து சுகாதார விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ், சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செப்டம்பா் 1 முதல் 15-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வலிவலம் தொடக்கப் பள்ளியில் கை கழுவுதல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் பள்ளிக் குழந்தைகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. கரோனா காலத்தில் கை கழுவுதலின் அவசியம், சரியாக கை கழுவும் முறைகள், கை கழுவ வேண்டிய தருணங்கள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வலிவலம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் சீ.முரளி, ஆசிரியா் த. ஐயப்பன், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ம.பாண்டிக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.