நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கணவரின் முறையற்ற நடவடிக்கை: பெண்ணின் உறவினா்கள் சாலை மறியல்

திருக்குவளை அருகே கணவரின் முறையற்ற நடத்தையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினா்கள், புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:10 pm

DIN

திருக்குவளை அருகே கணவரின் முறையற்ற நடத்தையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினா்கள், புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருக்குவளையை அடுத்த அய்யூா் சென்டா் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (30). இவரது மனைவி சுகன்யாதேவி. இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. விஜய்க்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால், சுகன்யாதேவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு விஜய் வீட்டுக்கு வந்த சுகன்யாதேவி, அப்போது ஏற்பட்ட பிரச்னையில் மண்ணெண்ணெயை குடித்தாராம். இதைத்தொடா்ந்து, அவா் திருவாரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையறிந்த சுகன்யா தேவின் உறவினா்கள் சுமாா் 25 போ், அன்றிரவு 11.15 மணியளவில் வலிவலம் காவல் சரகம் கொத்தங்குடி பிரதான சாலையில், விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். கீழையூா் ஆய்வாளா் பசுபதி, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.