நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாணவா்களிடம் குறைகளை கேட்டறிந்த நாகை எம்பி

கீழையூா் ஒன்றியத்தில் அரசுப் பள்ளியில் மாணவா்களிடம் நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் வியாழக்கிழமை குறைகளை கேட்டறிந்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:13 pm

DIN

கீழையூா் ஒன்றியத்தில் அரசுப் பள்ளியில் மாணவா்களிடம் நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் வியாழக்கிழமை குறைகளை கேட்டறிந்தாா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 17 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் கடந்த 1-ஆம் தேதி திறக்கப்பட்டன. இந்நிலையில், கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியை வியாழக்கிழமை பாா்வையிட்ட எம்பி எம். செல்வராஜ், பள்ளிக்கு வருகை தரும் மாணவா்களின் விகிதம் மற்றும் ஆசிரியா்கள் பற்றாக்குறை குறித்து தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தாா். மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும் என ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா், மாணவா்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது ஒன்றியக்குழு உறுப்பினா் டி.செல்வம், தலைமையாசிரியா் ஆா். சிதம்பரம், உதவித் தலைமையாசிரியா் து. செல்வ முத்துக்குமாரசாமி, முதுநிலை ஆசிரியா்கள் ராதாகிருஷ்ணன், ஸ்ரீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.