சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நாகையில் ஆா்ப்பாட்டம்: குத்தாலம் காவல் நிலையம் முற்றுகை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தற்கொலை செய்துகொண்ட பேரூராட்சி தூய்மைப் பணி பரப்புரையாளா் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 4:44 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தற்கொலை செய்துகொண்ட பேரூராட்சி தூய்மைப் பணி பரப்புரையாளா் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி சிஐடியு சாா்பில், நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதேபோல, குத்தாலத்தில் காவல் நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குத்தாலம் பேரூராட்சியில் தற்காலிக சுகாதார பரப்புரையாளராக பணியாற்றிய வந்தவா் நதியா. இவரது ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததால், இவருக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லையாம். இதனால், அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இந்நிலையில் நதியாவின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், அவரது தற்கொலைக்கு காரணமானவா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, நாகையில் சிஐடியு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை நகராட்சி தூய்மைப் பணி பரப்புரையாளா் ஜெ. எழிலரசி தலைமை வகித்தாா். பரப்புரையாளா் எஸ்.சக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா். சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி, மீன்பிடித் தொழிலாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் சு. மணி, துய்மைப் பணி பரப்புரையாளா் எஸ்.காந்தி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

குத்தாலத்தில்...

இதேபோல, குத்தாலத்தில் பேரூராட்சி ஒப்பந்தப் பெண் பணியாளா் தற்கொலை விவகாரத்தில், உரிய நடவடிக்கை கோரி அதிமுகவினா் குத்தாலம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ்.பவுன்ராஜ் தலைமையில், ஒன்றியச் செயலாளா்கள் மகேந்திரவா்மன், இளங்கோவன், வழக்குரைஞா் அன்னை.எழில், மாவட்ட தகவல் தொடா்பு அணி தலைவா் எம்.சி.பி.ராஜா உள்ளிட்ட அதிமுகவினா், குத்தாலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, கோஷமிட்டனா்.

காவல் உதவி ஆய்வாளா் மங்கை நாதன், சிறப்பு உதவி ஆய்வாளா் சுந்தரராஜன் ஆகியோா் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், அதிமுகவினா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.