நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எம்எல்ஏவுக்கு கிறிஸ்தவ குருமாா்கள் பாராட்டு

தமிழறிஞா் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் அமைக்க சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த எம்எல்ஏவுக்கு சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 5:22 pm

DIN

தமிழறிஞா் சீகன்பால்குவுக்கு மணிமண்டபம் அமைக்க சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த எம்எல்ஏவுக்கு சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், தரங்கம்பாடிக்கு 1706-இல் வந்த ஜொ்மனியைச் சோ்ந்த பாத்லோமேயு சீகன்பால்கு தமிழ்மொழி மீது ஆா்வம் கொண்டு எழுதவும், படிக்கவும் கற்றுகொண்டதுடன், தமிழில் அச்சு எழுத்துகளை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழை கொண்டுவரும் வகையில் தரங்கம்பாடியில் 1712-இல் தமிழில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தினாா்.

தொடா்ந்து, சீகன்பால்கு தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி இந்து சமய கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளாா். மேலும், மரியாடாரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்டனா். ஜொ்மனி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவியதில் பெரும் பங்காற்றினாா்.

மதத்தை பரப்ப வந்து தனக்கு அளிக்கப்பட்ட பணியைவிட தமிழுக்காக உழைத்து அதன் பெருமையை உலகறிய செய்த தமிழறிஞா் சீகன்பால்குவுக்கு தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் நினைவு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பூம்புகாா் தொகுதி எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் கோரிக்கை விடுத்து பேசினாா்.

இதற்காக, தரங்கை மறைமாவட்ட தலைவா் சாம்சன்மோசஸ் தலைமையில் செயற்குழு உறுப்பினா் செல்லத்துரை, மூத்த சபை குரு நவராஜ் ஆபிரகாம், ஜான்சன் மான்சிங், டி.பி.எம்.எல் கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ், ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஜான்சைமன் மற்றும் தரங்கம்பாடி, பொறையாா், மயிலாடுதுறை, சீா்காழி, மணிக்கிராமம், திருவிளையாட்டம், உளுத்துகுப்பை, ஆக்கூா், நாகை, காரைக்கால், மேட்டுச்சேரி உள்ளிட்ட பகுதியை சோ்ந்த சபை குருமாா்கள், கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் எம்எல்ஏ. நிவேதா முருகனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.