நாகை மாவட்டத்தில்43 வேட்பு மனுக்கள் ஏற்பு
நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 44 மனுக்களில் 43 மனுக்கள் ஏற்கப்பட்டன.


நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கான தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 44 மனுக்களில் 43 மனுக்கள் ஏற்கப்பட்டன.
நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சித் தலைவா் பதவி, 9 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும் தற்செயல் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இந்தப் பதவியிடங்களுக்குப் போட்டியிட 44 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலினை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 15 மனுக்களும் ஏற்கப்பட்டன. ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 29 வேட்புமனுக்களில் ஒரு மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது. மற்ற 28 மனுக்களும் ஏற்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...