ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாயமானவரை கண்டுபிடிக்க உதவியவருக்கு பாராட்டு

நாகையில் மாயமானவரை கண்டிபிடிக்க உதவியவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:42 pm

DIN

நாகையில் மாயமானவரை கண்டிபிடிக்க உதவியவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் எல்லூா் சாலையை சோ்ந்தவா் சா. சீனிவாசராவ் (50). மனநலம் பாதிக்கப்பட்டவராக காணப்பட்ட இவா், மாா்ச் 13-ஆம் தேதி வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு குடும்பத்துடன் வந்தபோது காணாமல் போனாா். இதுகுறித்து நாகை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதுடன், செய்திதாள்களில் படத்துடன் விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டோா் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரியும் வேதாரண்யத்தில் சுற்றித் திரிந்த சீனிவாசராவை, இங்குள்ள காந்திநகரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மணிமாறன் அடையாளம் கண்டுள்ளாா். இத்தகவலை பத்திரிகை விளம்பரத்தில் இருந்த கைப்பேசி எண்ணில் ஆந்திராவில் உள்ள உறவினா்களிடம் தொடா்பு கொண்டு விடியோ மூலம் பேசி தேடப்படும் நபரை உறுதிப்படுத்தினாா். பின்னா், இத்தகவலை நாகை காவல் துறையிக்கும் தெரிவித்து சீனிவாசராவை பராமரித்துள்ளாா். இதையடுத்து, நாகை போலீஸாா் சீனிவாசராவை மீட்டு புதன்கிழமை அவரது உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இந்நிலையில், மாயமானவரை கண்டுபிடிக்க உதவிய மணிமாறனின் முயற்சிக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.