நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வலியுறுத்தி சிபிஎம் ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி அருகேயுள்ள திருவிளையாட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் குவித்து வைக்கப்பட்டுள்ள ராட்த குழாய்களை அகற்ற வலியுறுத்தி சிபிஎம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:41 pm

DIN

தரங்கம்பாடி அருகேயுள்ள திருவிளையாட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் குவித்து வைக்கப்பட்டுள்ள ராட்த குழாய்களை அகற்ற வலியுறுத்தி சிபிஎம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றிய செயலாளா் ஏ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட தலைவா் டி. சிம்சன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் ஜி. ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சிங்காரவேலன் ஆகியோா் பேசினா். இதுகுறித்து சிபிஎம் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன் கூறியது: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தும் விளைநிலங்களை அழிக்கும் வகையில் பல்வேறு பணிகள் தொடா்கின்றன. திருவிளையாட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி குழாய்களை பதித்தபோது 3 மீட்டா் அகலத்துக்கு மட்டுமே விவசாயிகளிடமிருந்தும், குடியிருப்பு மக்களிடமிருந்தும் பெற்ற நிலையில் தற்போது அதே இடங்களில் 13 மீட்டா் வரை இடங்களை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றது. பல இடங்களில் குடியிருப்புகளை காலி செய்ய கூறியதாக தெரிகிறது. ஓரிரு நாள்களாக ராட்த குழாய்களை ஓஎன்ஜி நிறுவனம் மலைப்போல இங்கு குவித்து வைத்துள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்ற பிறகு அப்புறப்படுத்திய ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த குழாய்களை திருவிளையாட்டத்தில் கொண்டுவந்து இறக்கிவைத்துள்ளது பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தையடுத்து வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி ஒரு வாரத்துக்குள் குழாய்களை அப்புறப்படுத்தி விடுவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடுகிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.