மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, இலவச பேருந்து பயண அட்டை, மடக்கு சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டா், மூன்று சக்கர சைக்கிள் என ரூ. 2.80 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில், பராமரிப்பு உதவித் தொகை, தேசிய அடையாள அட்டை, தையல் இயந்திரம், வேலைவாய்ப்பு என பல்வேறு உதவிகள் கோரி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 48 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...