நாகப்பட்டினம்: நாகூர் மீனவர்கள் திங்கள்கிழமை கடலில் தேசியக் கொடியை ஏற்றினர்.
நாடு முழுவதும் சுதந்திர நாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் என ஆங்காங்கே தேசியக் கொடியைப் பறக்கவிட்டு மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாகூர் மீனவர்கள் திங்கள்கிழமை கடலில் தேசியக் கொடியை ஏற்றினர். நாகூர் பட்டினச்சேரி ஆரியநாட்டுத் தெருவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை படகில் கடலுக்குச் சென்றனர்.
அங்கு 25 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தை நடுக்கடல் நீரில் மிதக்கவிட்ட மீனவர்கள் படகில் இருந்தபடியே தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து வந்தே மாதரம் என முழக்கமிட்ட மீனவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் சுதந்திர நாளை விழாவை கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க் கப்பல்கள்: நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!







