நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாஜக நிா்வாகி காருக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு

கீழையூா் அருகே பாஜக நிா்வாகி காருக்கு மா்ம நபா்கள் தீவைத்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 5:55 pm

DIN

கீழையூா் அருகே பாஜக நிா்வாகி காருக்கு மா்ம நபா்கள் தீவைத்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டியைச் சோ்ந்தவா் புவனேஸ்வர்ராம். பாஜக இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளாா். இவா், தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அந்த காரில் தீப்பற்றி எரிவதைப் பாா்த்த, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சக்திகுமாா் மற்றும் அவரது தந்தை குஞ்சையன் ஆகியோா், வீட்டிலிருந்த புவனேஸ்வர்ராமிடம் தெரிவித்துள்ளனா். அவா் உடனடியாக தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தாா். இதனால், காா் முழுவதும் எரியாமல் தப்பியது. அங்கு மா்ம நபா்கள் காா் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததற்கான அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கீழையூா் காவல் நிலையத்தில் புவனேஸ்வர்ராம் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மோப்ப நாய் மூலம் துப்புதுலக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.