விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் படகுடன் தவித்த 4 மீனவர்கள் மீட்பு

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்த போது  இலங்கையைச் சேர்ந்து மர்ம நபர்களால்  டீசல் உள்ளிட்ட பொருள்கள் அபகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 4 மீனவர்கள் படகுடன்  இன்று மாலை

News image
கோடியக்கரையில் கரை சேர்க்கப்பட்ட மீனவர்கள்.
Updated On :18 பிப்ரவரி 2022, 1:57 pm

DIN

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்த போது  இலங்கையைச் சேர்ந்து மர்ம நபர்களால்  டீசல் உள்ளிட்ட பொருள்கள் அபகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 4 மீனவர்கள் படகுடன்  இன்று மாலை  (வெள்ளிக்கிழமை) கரை சேர்க்கப்பட்டனர்.

நாகை மாவட்டம், கோடியக்கரை மீன்பிடித்துறைல் இருந்து கண்ணாடியிழைப் படகு ஒன்றில் கோடியக்கரையைச் சேர்ந்த  செல்வம், ரவி, நாகூரான், பூவரசன் ஆகிய  மீனவர்கள் நால்வரும்  வியாழக்கிழமை பகல்  கடலுக்குள்  சென்றனர்.
 அன்று இரவு  கோடிக்கரைக்கு தென்கிழக்கே 9 கடல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன்பிடித்துள்ளனர்.

அப்போது அங்கு ஒரு படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த 4 மர்ம நபர்கள், மீனவர்கள் இருந்த படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மீன்வர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, செல்லிட பேசிகள் - 2 , பிடித்து வைத்திருந்த மீன், படகில் இருந்த பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை பறித்துச் சென்றுள்ளனர். 
எரிபொருள்  இல்லாததால் படகை இயக்க முடியாமல்  மீனவர்கள் தவித்துள்ளனர். 

Story image

அப்போது, அந்த வழியாக  கரை திரும்பிய  காரைக்கால் பகுதி மீனவர்கள் மூலம் கோடியக்கரையில் வசிக்கும் படகு உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, மற்றொடு படகில்  பெட்ரோல், உணவு பொருள்களை சக மீனவர்கள்  எடுத்துச் சென்றனர்.

நடுக்கடலில் படகுடன் தவித்த  மீனவர்கள் நால்வரும் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக மீன்வளத்துறையினர், கியூ பிரிவு உள்ளிட்ட  போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.