காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருணாநிதியின் சாதனை விளக்க அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் வகையில் திருக்குவளையில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகம் தொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் வகையில் திருக்குவளையில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகம் தொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருக்குவளை ஊராட்சி அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ. பெரியசாமி முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் வரவேற்றாா். திருக்குவளை பகுதியில் மேற்கொள்ளவேண்டிய வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வாா்டு உறுப்பினா் என். சிங்காரவேல் நன்றி கூறினாா்.

பின்னா், திருக்குவளையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக, அங்குள்ள அவரது நினைவுஇல்லம், சுற்றுப்புற சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வேதாரண்யம் கோட்டாட்சியா் து.சு. துரைமுருகன், செயற்பொறியாளா் என். பசுபதி (ஊரக வளா்ச்சி), பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் இ. மோகனசுந்தரம் (கட்டடம்), உதவி பொறியாளா் ஆா். வேலுசாமி, சுற்றுலாத் துறை அலுவலா் மாதவன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராணி, திருக்குவளை வட்டாட்சியா் கு.சிவகுமாா், கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். ராஜகுமாா், கி. செந்தில், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, கடந்த மாதம் நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு, திருக்குவளையில் கருணாநிதியின் சாதனைகளை போற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தாா். இந்த அருங்காட்சியகத்தை கருணாநிதி பிறந்த நூற்றாண்டான 2024 ஆம் ஆண்டு திறக்கப்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.