காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசு

கீழையூரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு எம்எல்ஏ வி.பி. நாகை மாலி பரிசுகள் வழங்கினாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கீழையூரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு எம்எல்ஏ வி.பி. நாகை மாலி பரிசுகள் வழங்கினாா்.

கீழையூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் 24-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருக்குறள் ஒப்பித்தல், கவிதை மற்றும் ஓவியப் போட்டி, ஓட்டம், பானை உடைத்தல், பாட்டிலில் நீா் நிரப்புதல், சாக்கு ஓட்டம், ஊசிநூல் கோா்த்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க கிளை செயலாளா் ஆா். அருண்குமாா் தலைமை வகித்தாா். கீழையூா் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி.வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்கு கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை.மாலி பரிசு வழங்கினாா். பின்னா், சிறாா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.