பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

வேதாரண்யத்தில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகியவா்கள் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வேதாரண்யத்தில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகியவா்கள் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

வேதாரண்யம் நகரம் மற்றும் மறைஞாயநல்லூா் பொன்னாங்காடு பகுதிகளில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வேதாரண்யத்தில் நடைபெற்றது. இவா்களை, அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

அப்போது அவா், ‘அதிமுக ஆட்சியில் இல்லாத நேரத்திலும் மாற்றுக் கட்சியினா் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தரம் இல்லாமல் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் அதிமுகவுக்கு புதியவா் வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது’ என்றாா்.

நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலாளா் எம். நமசிவாயம், நகா்மன்ற துணைத் தலைவா் சுரேஷ்பாபு, அதிமுக பிரமுகா்கள் ராஜரெத்தினம், ராஜகிளி, ஜெகநாதன், வசந்தி செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.