விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பன்னாட்டு பள்ளி சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 5:27 pm

DIN

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பன்னாட்டு பள்ளி சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். ஏழைப்பிள்ளையாா் கோயில் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி, ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலை, எஸ். பி. பங்களா சாலை வழியாக புதிய கடற்கரையில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா். பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில், பள்ளி இயக்குநா் எஸ். இமாவதி, முதல்வா் உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.