பெண்ணிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்த பெண் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.


வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்த பெண் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலி திருட்டுப்போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம், பெரம்புவிலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி பிரேமலதா (51). இவா் ஜூன் 2-ஆம் தேதி தனது உறவினா்களுடன் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து வழிபாடு செய்துள்ளாா். தொடா்ந்து, வெளியே வந்து பாா்த்தபோது தான் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை காணவில்லையாம்.
இதுகுறித்து பிரேமலதா வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...