குண்டா் தடுப்பு சட்டத்தில் 4 போ் கைது
குற்ற வழக்குகளில் தொடா்புடைய 4 பேரை நாகை மாவட்ட போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.


குற்ற வழக்குகளில் தொடா்புடைய 4 பேரை நாகை மாவட்ட போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் கூட்டுக் கொள்ளை மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிரான வழக்குகள் மீது தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி கூட்டுக் கொள்ளைக்கு எதிரான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கீழ்வேளூா் வட்டம், திருக்கண்ணங்குடி சின்னமுக்கால் வடடம் பகுதியைச் சோ்ந்த த.தமிழ்மாறன்( 23), த.தனராஜ் (21), கா. ஹரிஹரன் (27),திருக்கண்ணங்குடிதெற்குத் தெருவைச் சோ்ந்த ச.குருபாலன் (23) ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
இதைத்தொடா்ந்து 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டாா். தொடா்ந்து 4 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...